Skip to main content

எவ்வாறு கிரஹ பிரவேசம் செய்ய வேண்டும்? சிறந்த பூஜைகள் மற்றும் குறிப்புகள்.

Graha pravesam
Graha Pravesam




ஒவ்வொரு வீடும் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. நீங்கள் வாங்க இருப்பது வெறும் கட்டிடம் மட்டுமல்ல, நீங்களும் உங்களது சந்ததிகளும் செல்வ வளம் பெற்று வாழ ஒரு இருப்பிடம். 

வீட்டின் ஒவ்வொரு முக்கிய அம்சங்களும், உங்கள் வாழ்க்கையில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடிக்கும்.

அதில் நீங்கள் செல்ல திட்டமிட்டிருக்கும்  முதல் நாளான கிரஹ பிரவேச  தினமானது  ஒரு சிறப்பு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது, குறிப்பாக நீங்கள் ஒரு சுபமுகூர்த்த தினத்தை அல்லது அதற்கு தகுந்த ஒரு நல்ல நேரத்தைத் தேர்ந்தெடுக்கும்போது. வாஸ்து சாஸ்திரத்தின் படி குடியேறுபவர்களின் வாழ்வில் நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என்று கூறப்படுகிறது.

மணிவே சிட்டி டெவெலப்பர்ஸ் தங்களது பத்து வருட அனுபவத்தில் 500க்கும் மேற்பட்ட அழகிய இல்லங்களை உருவாக்கித்தந்துள்ளது. பலர் இன்று வாடகை வீட்டில் இருந்து தங்களது சொந்த வீட்டிற்கு குடி பெயர்ந்துள்ளனர். அந்த ஒவ்வொரு தருணமும் எங்களுக்கு பெருமையை தந்துள்ளது. 

அது போல் நீங்களும் உங்களது சொந்த வீட்டிற்கு குடிசெல்வதற்கு தயாராக உள்ளீர்களா? அந்த சுபமுகூர்த்த தினத்தை எதிர்பார்த்து காத்துள்ளீர்களா? ஒரு சில நிமிடங்களை இதற்காக ஒதுக்குங்கள். 

இங்கு நீங்கள் காண இருக்கும் குறிப்புகள் நீங்கள் உங்கள் சொந்த வீட்டிற்கு கிரஹ பிரவேசம் செய்வதற்கு உபயோகமாக இருக்கும். 


சுத்தமும் சுற்றமும்

உங்கள் சொந்த வீடு கிரஹப்ரவேச தினத்திற்கு, முதன்மையாக சுத்தம் செய்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும். உங்கள் புதிய வீட்டின் சுற்றத்தில் எவ்வித அசுத்தங்கள் இன்றி, பழைய பொருட்கள் இன்றி தூய்மையாக வைத்திருத்தல் அத்தியாவசியமான ஒன்று.

அப்படி நீங்கள் வைத்திருப்பதால் வீட்டின் தோற்றமும் அழகும் முழுமை பெரும். துர்நாற்றங்கள், அசுத்தமான காற்று நீங்கி, உங்கள் வீட்டின் மென்மையான சுவாசத்தை உங்களால் உணர முடியும்.

தமிழ்நாட்டில் இன்றும் பல வீடுகளில் நம் பெண்கள் புது வீட்டிற்கு பசு சாணத்தை நீர் கலந்து தெளித்து வீட்டின் முற்பகுதியில் பூசுவார்கள். நம் முன்னோர்கள் இதை ஒரு நற்காரணத்திற்காகவே பின்பற்றி வந்தனர். 

பசுமாட்டுச்சாணம் காய்ந்த பின்பு, சூரியனில் இருந்து வரும் தீமை பயக்கும் புறஊதாக்கதிர்களை வீட்டின் மீது தாக்காமல் 60 சதவீதம் வரை தன்னுள் இழுத்துக்கொள்ளும் தன்மை உடையது.

அரிசி மாவில் கோலமிடும் வழக்கமும் இன்று நம்மில் பலர் பின்பற்றி வருகின்றனர். காரணம் சிறு எறும்புகளுக்கு உணவாகவும்,  புதிய வீட்டின் முற்றத்தை அலங்கரிக்கவும் உபயோகமாக இருக்கும் என்பதால்.

"கலச பூஜை"

kalasa pooja



வழக்கமாக கிரஹ பிரவேசத்திற்கு முன் நடத்தப்படும் கலச பூஜை வீட்டில் வசிப்பவர்களுக்கு செழிப்புக்கான அடையாளத்தைக் குறிக்கிறது.

கிரஹ பிரவேசத்தின் ஒரு பகுதியாக, ஒன்பது வகை தானியங்கள், தண்ணீர், ஒரு வெள்ளி நாணயம் மற்றும் அதற்கு மேலே வைக்கப்பட்டுள்ள தேங்காய் நிரப்பப்பட்ட ஒரு செப்புப் பானை (கலசம்) பிடித்துக்கொண்டு வீட்டிற்குள் வலது கால் வைத்து நுழைய வேண்டும்.

ஏனெனில், செம்பிலான கலசத்தில் உள்ள நீரானது இயற்கையாகவே கிருமிகளை நீக்கி, எதிர்ப்பு சக்தியையும் மற்றும் நம் உடலில் இருந்து நச்சுத்தன்மையை நீக்கும் தன்மை உடையதாகும்.

நீங்கள் வீட்டிற்குள் நுழைவதற்கு முன், நுழைவாயிலில் தேங்காய் உடைத்துவிட்டு செல்வது எல்லா தடைகளையும் நீக்குவதைக் குறிக்கிறது. 


கிரஹ ப்ரவேசத்தின் போது ஹோமம் வளர்த்தல் பல நன்மைகளை அருளும் என நமது முன்னோர்கள் நம்பினார்கள். அதனால் பல ஹோமங்களையும் யாக பூஜைகளையும் பின்பற்றி வந்தனர். 

அதில் பிரசித்தி பெற்றது கணபதி ஹோமம்.  புதிய வீடு கிரஹ பிரவேசம், குழந்தைகளுக்கு பெயர் சூட்டுதல், புதிய தொழில் தொடங்க இது போன்ற நற்காரியங்களுக்கு முதற்கடமையாக கணபதி ஹோமம் செய்வது வழக்கமாகும். 



கணபதி ஹோமம் செய்வதால் வீட்டில் செல்வம் பெருகும் என்றும், குறைகள் நீங்கி வளம் பெறுவதற்கு வழி வகுக்கும் என்றும் இந்த ஹோமத்தை செய்வார்கள். மூலாதார சக்ரத்தின் அதிபதியாக விநாயகர் திகழ்கிறார். அவ்வாறு அவரை கணபதி ஹோமம் போன்ற பூஜைகளால் வணங்கி வந்தால் பொருட்செல்வ பயன் பெற்று வாழ்வோம் என்பது ஐதீகம்.

செழிப்பான, ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியான இல்லற வாழ்வை அடைய கடவுள்களின் அதிபதியாக திகழும் விநாயகரை வணங்குவதை சாலச்சிறந்தது என்று நமது பெரியோர்கள் கூறுவார்கள்.


1) உங்கள் புதிய வீட்டின் நுழைவாயிலுக்கு முன்னால் தடையாக எந்த ஒரு பொருளும் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்.

2) முன்கதவு செழிப்பு மற்றும் நல்ல அதிர்வலைகளை ஈர்க்கிறது. எனவே, எப்போதும் வாசலில் லட்சுமி பாதங்களை வரைந்து, சுவற்றின் வெளிப்புறத்தில் ஸ்வஸ்திகா மற்றும் ஓம் வடிவங்களை வரையவும்.

3) முன்வாசற்கதவை வாழைக்கன்று, மா இலைகள், நறுமணம் கமழும்
பூக்களால் அலங்கரித்து, தரையில் ஒரு ரங்கோலி அல்லது மாக்கோலங்கள் மூலம் அலங்கரிக்கலாம் செய்யுங்கள்.

4) கிரஹ ப்ரவேச நன்நாளில் வீட்டை சுத்தமாக வைத்திருங்கள்.

5) வீட்டை ஒளி விளக்குகளால் ஒளிரச்செய்து, அலங்கரிக்கும் போது வாசனைக்கு பூக்களைப் பயன்படுத்துங்கள்.

6) ஜோதிட நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்ட நல்ல நேரம் அல்லது முகூர்த்த நேரத்தின் பொது கிரஹ பிரவேஷத்தை செய்யவது மிகவும் நல்லது.

7) வீட்டிற்குள் நுழையும் போது எப்போதும் வலது காலை முன்னோக்கி வைத்து செல்ல வேண்டும்.

8) கிரஹ பிரவேசத்தின் பொது பசுவை அழைத்து வந்து, அதன் மீது பன்னீர் தெளித்து மஞ்சள், குங்குமம் அதன் நெற்றியில் வைத்து பசுவின் கழுத்தில் மாலை அணிவிக்க வேண்டும். பிறகு பசுவிற்கு புத்தாடை சாற்றி, பழ வகைகள், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை ஆகாரமாகத் தர வேண்டும்.

ko pooja



இதை கோ(அல்லது) கோமாதா பூஜை என்றழைப்போம்.

இவையே  கிரஹ பிரவேசம் செய்ய வேண்டிய முறைகள், சிறந்த பூஜைகள் மற்றும் குறிப்புகள்.

மணிவே நிறுவனத்தின் வீடு மற்றும் வீட்டு மனைகளில் முதலீடு செய்யவும், அவை அமைக்கப்பட்ட இடங்கள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள  அழைக்கவும் ☎ 98423 29990.

உங்களுக்கு விருப்பமெனில், கீழ்கண்ட எங்களது முகநூல் பக்கத்தை நீங்கள் Like, share, மற்றும் Follow செய்துகொள்ளலாம். நன்றி. Click here  FOLLOW US ON SOCIAL MEDIA

Most read blogs:

All you need to know about a gated community

Top 5 factors you must know before you buy a land or home.





 






















Comments

Popular posts from this blog

Tips On How To Construct A Durable House | Maniiway | ESTATES BUZZ

  It's the dream of every person to construct a good house that remains strong ever. Unfortunately, veritably many people know how to do it. To help you out then are tips on how to construct a long lasting house Have a great design A durable house starts from the design stage. For a great design you need to hire an endured mastermind who'll pay attention to details similar as exposed shafts or plasterwork. The professional will design the house in such a way that the shafts are hidden therefore guarding them from damage. The professional will also insure that the cataplasm is thick enough to last for a long time. CLICK HERE Get a good contractor This is the person who handles the construction work. The contractor is veritably sensitive as he is the one who determines the quality of accoutrements that are used and the quality of workers handling the design. For a long lasting construction you should hire a contractor with a good character. If you're constructing a specialize...

5 Steps To Choose The Best Paving Contractor | ESTATES BUZZ

  5 Steps To Choose The Best Paving Contractor Still, you would like to consider a lot of factors, If you would like to hire the services of a paving contractor.However, we propose that you do your schoolwork, If you would like to get the stylish deal as far as price and quality are concerned. As a matter of fact, a touch exploration can go a long way. you want to ask the right questions to find out the stylish professional to cover your requirements. during this composition, we've given a pair of way that can help you go with the stylish contractor.  CLICK HERE 1 Material Selection Before you accompany the contractor, we propose that you decide on a color. As an volition, if you've got no idea how to go about choosing a contractor, we will help you with this. As a matter of fact, professional advice has no volition. you'll also get their experience in further ways than one. The way they convey with you can speak volumes about their professionalism. So, you'll want to c...

What is House Elevations And How Architects Draw Them? | ESTATES BUZZ

  What is House Elevations And How Architects Draw Them? House elevations are gauged delineations that offer you an idea of how your house will look like formerly complete. an honest elevation should show the following CLICK HERE Height and range of roof Length and height of every wall Visible a part of foundation Exterior features similar as stairs, galleries and balconies Window and door neat Exterior wall and roof finishing Eaves troughs Complete ground position How an mastermind draws an elevation For the mastermind to draw an honest elevation he she undertakes a number of way. a number of these way include CLICK HERE Drawing the most bottom wall birth the professional thresholds drawing the bottom plan from the extreme left end of the wall. The professional measures the vertical distance of the wall putting into consideration the consistence of the sliding material. The professional marks all the proper areas and draws lines that represent the structure. The mastermind continu...